/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றும் பணி தீவிரம்
/
வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றும் பணி தீவிரம்
வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றும் பணி தீவிரம்
வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றும் பணி தீவிரம்
ADDED : நவ 20, 2025 02:08 AM
அன்னூர்: அன்னூர் தாலுகாவில், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது.
அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் ஒன்றியத்தில், 117 ஓட்டு சாவடிகள் உள்ளன. ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.
இதில் அன்னூர் ஒன்றியத்தில் 95 சதவீதம் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறும் பணி நடந்து வருகிறது.
அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை ஆன்லைன் வாயிலாக நேற்று பதிவேற்றம் செய்தனர்.
பதிவேற்றம் செய்யும் பணியை தேர்தல் துணை தாசில்தார் ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'படிவம் நிரப்புவதில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. 2002க்கு முன்பும் பின்பும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து 2002ல் மட்டும் பெயர் இல்லாத வாக்காளர்கள் படிவத்தை எப்படி நிரப்புவது என்ற கேள்விக்கு ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் பதில் தெரியாமல் மழுப்புகின்றனர்.
படிவங்களை நிரப்புவதற்கு போதுமான உதவி மையங்கள் இல்லை. தன்னார்வலர்கள் இல்லை, படிவம் வழங்குவதிலும் திரும்ப வாங்குவதில் மட்டுமே ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
படிவத்தை நிரப்ப ஒத்துழைப்பதில்லை. ஓட்டு சாவடி செயல்படும் இடங்களில் படிவம் நிரப்புவதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை அங்கு பணியமர்த்த வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பலருக்கு போதிய பயிற்சி இல்லாததால் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து தெளிவான விளக்கத்தை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.

