தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செம்மொழி பூங்காவுக்குள் அருங்காட்சியகம் வேலை நடக்கிறது; மார்ச் முதல் பார்வையிடலாம்

 செம்மொழி பூங்காவுக்குள் அருங்காட்சியகம் வேலை நடக்கிறது; மார்ச் முதல் பார்வையிடலாம்

 செம்மொழி பூங்காவுக்குள் அருங்காட்சியகம் வேலை நடக்கிறது; மார்ச் முதல் பார்வையிடலாம்


ADDED : பிப் 18, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உள்ளது. செம்மொழி பூங்கா என பெயரிட்டு இருப்பதால், வரலாற்று தகவல்கள் கூடுதலாக இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்குமென மக்கள் விரும்புகின்றனர். நேரு ஸ்டேடியம் வணிக வளாகத்தில் செயல்படும் அரசு அருங்காட்சியகத்தை இவ்வளாகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

டிக்கெட் வழங்கும் கட்டடத்தில் 4,000 சதுரடி பரப்புள்ள ஒரு அறையை மாநகராட்சி ஒதுக்கியது. செம்மொழி பூங்காவுக்கு டிச. முதல் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு மாதத்துக்குள் அருங்காட்சியகம் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர். இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் நடக்கவில்லை.

அருங்காட்சியக பொறுப்பாளர்களிடம் கேட்ட போது, 'இடம் மாற்ற ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அருங்காட்சியக பொருட்களை காட்சிப்படுத்த கண்ணாடி ரேக்குகள், விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அகழ்வராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுகள், தொல்லியல் பொருட்கள், ரோமானிய நாணயங்கள், பிராமி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள் உள்ளன. அவற்றை பூங்கா வளாகத்துக்கு பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும். 10 நாட்கள் தேவைப்படும். அவற்றை ரேக்குகளில் வரிசையாக அடுக்கி, கண்ணாடி பொருத்த வேண்டும். மார்ச் முதல் பார்வையிடும் வகையில் பணிகள் வேகமாக செய்யப்படுகின்றன' என்றனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா


மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ''அருங்காட்சியகத்தை மாற்ற ரேக்குகள் அமைக்கப்படுகின்றன. அரசு துறை என்பதால், தேவைப்பட்டால் வாடகை குறைக்கப்படும். அடுத்த கட்டமாக அரசிடம் நிதி பெற்று 2,000 சதுரடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா அமைக்க உள்ளோம். சமுதாய பொறுப்பு நிதி பெறப்படுகிறது. உயிர் அமைப்பு ஒரு கோடி ரூபாய் தருகிறது. ஏ.ஐ. தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்படும்,'' என்றார்.

பங்களாக்களை பயன்படுத்துங்க


ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டுகள், ஏ.ஆர்./ வி.ஆர். ஆய்வகங்கள் உருவாக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. இன்னும் உருவாக்கப்படவில்லை. சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. தங்கியிருந்த பழமையான பங்களாக்கள் இருக்கின்றன. வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. இந்த பங்களாக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us