/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உத்வேகத்துடன் செயல்படுங்கள்' : பா.ஜ., தேசிய செயலாளர் அறிவுரை
/
'உத்வேகத்துடன் செயல்படுங்கள்' : பா.ஜ., தேசிய செயலாளர் அறிவுரை
'உத்வேகத்துடன் செயல்படுங்கள்' : பா.ஜ., தேசிய செயலாளர் அறிவுரை
'உத்வேகத்துடன் செயல்படுங்கள்' : பா.ஜ., தேசிய செயலாளர் அறிவுரை
ADDED : பிப் 06, 2025 09:46 PM

அன்னுார்; 'உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்,' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் அறிவுறுத்தினார்.
பா.ஜ.,வில், கிளை, மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் அவிநாசி, மேட்டுப்பாளையம், சூலூர் ஆகிய மூன்று தொகுதிகள் அடங்கிய கோவை வடக்கு மாவட்ட தலைவராக பொன்னே கவுண்டன் புதூரை சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பா.ஜ., சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், பொன்னே கவுண்டன் புதூர் வந்தார். மாரிமுத்து இல்லத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளை சந்தித்தார்.இப்ராஹிம் பேசுகையில், தமிழகத்தில் உறுப்பினர் சேர்ப்பு புதிய வரலாறு படைத்துள்ளது. நிர்வாகிகள் புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செயல்பட வேண்டும், என அறிவுறுத்தினார். வேலூர் இப்ராஹிமுக்கு, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.