/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளியை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை
/
தொழிலாளியை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை
ADDED : ஜூலை 14, 2025 06:33 AM
போத்தனூர்: கோவை, எட்டிமடை பாலத்தில் நகை பட்டறை தொழிலாளியை தாக்கி, 30 லட்சம் ரூபாயை பறித்து காரில் தப்பிய நான்கு பேர் கும்பலை, போலீசார் தேடுகின்றனர்.
கேரள மாநிலம், திருச்சூர், வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயன், 50. கேரள மாநிலம், நெல்லாங்கராவில் உள்ள சதீஷ் என்பவரின் நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர், நானா சோ ஜாதவ். இவர், நேற்று முன்தினம், 30 லட்சம் ரூபாய் கொடுத்து, கேரளாவில் இருந்து ஏல நகை வாங்கி வர, ஜெயனிடம் கூறியுள்ளார்.
ஜெயன், கோவை -- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் காலை சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த நான்கு பேர், 30 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.