/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ADDED : டிச 19, 2025 06:44 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் ராட்டிணம் இயக்கிய வடமாநிலத் தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், ரோட்டின் இருபுறத்திலும் கடைகள் மற்றும் ராட்டிணம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது வழக்கம்.
இந்நிலையில், கடைசி திருவிழாவான, நேற்று முன்தினம் இரவு 'கேட்டர் பில்லர்' எனும், குழந்தைகள் விளையாடக்கூடிய சிறிய ராட்டிணத்தின் மோட்டர் சுவிட்ச்சை அதன் பணியாளர் 'ஆப்' செய்த போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சந்திரன், 56, என்பவர் கோவில் திருவிழாக்களில் ராட்டிணம் அமைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஸ்ராபுல்இஸ்லாம், 19, என்பவர் வேலைக்கு சேர்ந்தார். நல்லட்டிபாளையம் திருவிழாவில் ராட்டிணத்தை இயக்கும் போது மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்தது.

