/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ADDED : பிப் 18, 2026 06:08 AM
கோவில்பாளையம்: பிப். 18--: புளியமரத்தில் காய்பறிக்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
கோட்டைபாளையத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சம்பத், 66. இவர் தனது மனைவி பிரேமலதா, 62. மகன் அஷ்யந்த், 40. ஆகியோருடன் நேற்று மதியம் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குரும்பபாளையத்தில் புளிய மரத்தில் புளியங்காய் பறித்துள்ளார்.
15 அடி நீளம் உள்ள இரும்பு கம்பியை பயன்படுத்தி புளியமரத்தில் ஏறி புளியங்காய் அடிக்கும் போது கை தவறி மரத்தை ஒட்டிச் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பட்டு விட்டது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பத் உடல் கருகியது. மரக்கிளைகளுக்கு இடையில் சிக்கி இறந்தார். கோவில்பாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

