தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி

காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி

காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 18, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் ரயில்வே குடியிருப்பு பகுதியில் பணிக்கு சென்ற ஒப்பந்த தொழிலாளி காட்டெருமை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சலாம் காலனி பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன், 52. இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர், குன்னுார் ரயில்வே பொதுப்பணி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

நேற்று காலை, 8:30 மணியளவில், இவர் வழக்கம் போல் ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு, பணிக்கு சென்று கொண்டிருந்த போது, காட்டெருமை எதிர்பாராதவிதமாக தாக்கியது. வயிற்று பகுதியில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் மற்றும் வனத்துறையினர், உயிரிழந்த அலாவுதீனின் உடலை, குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குன்னுார் வனச்சரகர் வீரமணி கூறுகையில்,‘‘உயிரிழந்த அலாவுதீனின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகையாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.முதற்கட்டமாக ஈமச்சடங்கிற்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us