/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை
/
சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 10, 2025 10:34 PM
வால்பாறை; வால்பாறை, சக்தி - தலநார் எஸ்டேட் பகுதியில், நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது கவர்க்கல் டீ எஸ்டேட். இங்கிருந்து, 12 கி.மீ., தொலைவில் சக்தி - தலநார் எஸ்டேட் அமைந்துள்ளது. சக்தி, தலநார், பிளண்டிவேலி, மகாலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 25 கி.,மீ., பயணித்து வால்பாறை நகருக்கு செல்ல வேண்டியுள்ளது.
சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சக்தி - தலநார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுளாக வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இப்பகுதியில் மருத்துவமனை இல்லாததால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, தலநார் அரசு துவக்கப்பள்ளி அருகில், நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.