சம வேலைக்கு சம ஊதியம் வழங்க உழைக்கும் பெண்கள் கோரிக்கை
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க உழைக்கும் பெண்கள் கோரிக்கை
ADDED : செப் 29, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
கோவை செப். 30 --–: சி.ஐ.டி.யூ., உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட பேரவை கூட்டம், பெ.நா.பாளையம், கே.ஆர்.மண்டபத்தில் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாநிலக் குழு உறுப்பினர் சத்யா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிரந்தரத் தொழில்களில் ஒப்பந்த முறை கூடாது. திட்டப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ. 26,000 குறைந்தபட்ச ஊதியம் என சட்டம் இயற்ற வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும். பெண்கள் பணியாற்றும் இடங்களில் விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
