/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாராயணா பள்ளி மாணவர்களுக்கு பயிலரங்கு
/
நாராயணா பள்ளி மாணவர்களுக்கு பயிலரங்கு
ADDED : டிச 18, 2025 05:12 AM

கோவை: நாராயணா கல்வி நிறுவனங்களின் சார்பில், தமிழகத்தில் உள்ள பல்வேறு நாராயணா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக, நரம்பியல் மொழி நிரலாக்க பயிலரங்கு, கோவையில் நடத்தப்பட்டது. நாராயணா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஷரணி பொங்கூரு வழிநடத்தினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு முழுவதுமுள்ள பல நாராயணா பள்ளிகளைச் சேர்ந்த 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள், 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உணர்ச்சித் தெளிவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் மேம்பட்ட கவனம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பயிலரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த முயற்சி குறித்து, இயக்குனர் ஷரணி பொங்கூரு கூறுகையில், ''மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சுவாசப் பயிற்சிகள், உணர்ச்சி ஒழுங்குமுறைப் பயிற்சிகள், சுயசிந்தனைப் பதிவு மற்றும் கனவுக் காட்சிப்படுத்தல் போன்ற நரம்பியல் மொழி நிரலாக்க அடிப்படையிலான பயிற்சிகள், கல்வி அழுத்தத்தை நிர்வகிக்கவும், உணர்ச்சி நுண்ணறிவை மேம்படுத்தவும், மன சமநிலையைப் பராமரிக்கவும் உதவும்,'' என்றார்.

