/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்குநாடு ஆஸ்பத்திரியில் உலக மயக்க மருந்து தினம்
/
கொங்குநாடு ஆஸ்பத்திரியில் உலக மயக்க மருந்து தினம்
ADDED : அக் 18, 2024 11:14 PM

கோவை : கொங்குநாடு மருத்துவமனையில், உலக மயக்க மருந்து தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கணேஷ் பாபு மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு தலைமை வகித்தனர்.
அனுபவமிக்க மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் சபரிகிரி வாசன், இருதய மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேஷ் குமார் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கொங்குநாடு இணை கல்லுாரி மாணவர்களின், விழிப்புணர்வு குறுநாடகம் நிகழ்த்தப்பட்டது. கொங்குநாடு அலைய்டு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி மாணவர்களால், உருவாக்கப்பட்ட மயக்க மருந்து மெஷினை, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கணேஷ் பாபு, நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர்.

