/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு கழிவு மேலாண்மையில் உலக சாதனை
/
மின்னணு கழிவு மேலாண்மையில் உலக சாதனை
ADDED : ஜன 31, 2026 05:15 AM

கோவை: மின்- கழிவு மேலாண்மை குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மின்னணு கழிவுகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தும் பெரிய அளவிலான செயல்பாட்டில் பார்க் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
கிரீன்இரா மறுசுழற்சி நிறுவனத்தின் நிறுவனரும், பார்க் தொழில்நுட்ப கல்லுாரியின் முன்னாள் மாணவருமான பிரசாந்த் ஓமனக்குட்டன், மின் கழிவுகளால் வரும் சவால், முறையான பிரித்தல் மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில், பங்கேற்று பல்வேறு வகையான மின்னணு கழிவுகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தினர்.
இறுதியில் உலக சாதனை ஒன்றியத்தின் நடுவர் கிறிஸ்டோபர், 1054 மாணவர்கள் வெற்றிகரமாக இந்த முயற்சியில் உலக சாதனை படைத்ததாக அறிவித்து, அதற்கான சான்றிதழை பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷாவிடம் வழங்கினார்.

