நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், உலக மண் தினம்- 2024 இன்று நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு, மண் பராமரித்தல், அளத்தல், கண்காணித்தல், நிர்வகித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, பேரணியை துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, முனைவர் ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீராமச்சந்திர சேகரன் வழங்குகிறார்.