sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்

/

 உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்

 உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்

 உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்


ADDED : மார் 23, 2026 09:58 PM

Google News

ADDED : மார் 23, 2026 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கு தலைமையாசிரியர் தினகரன் தலைமை ஏற்றார்.

நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் அவற்றின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், 'சிட்டுக்குருவிகளை காப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற கருத்தை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து நடந்த கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். அதன் பின் விழிப்புணர்வு கோஷங்கள் பதாகைகள் வாயிலாக, சிட்டுக்குருவி பாதுகாப்பின் அவசியத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் நடவடிக்கைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் என, பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான, ஏற்பாட்டினை ஆசிரியர் சத்யா செய்தார்.






      Dinamalar
      Follow us