/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவராத்திரி கொலுவில் காஞ்சி மகா பெரியவர் பிரசாதமாக அளித்த தேங்காய் வைத்து வழிபாடு!
/
நவராத்திரி கொலுவில் காஞ்சி மகா பெரியவர் பிரசாதமாக அளித்த தேங்காய் வைத்து வழிபாடு!
நவராத்திரி கொலுவில் காஞ்சி மகா பெரியவர் பிரசாதமாக அளித்த தேங்காய் வைத்து வழிபாடு!
நவராத்திரி கொலுவில் காஞ்சி மகா பெரியவர் பிரசாதமாக அளித்த தேங்காய் வைத்து வழிபாடு!
ADDED : செப் 27, 2025 11:38 PM

கோவை : தினமலர் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பொம்மை கொலு விசிட், ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் பகுதியில் நேற்று நடந்தது.
நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ள, தின மலர் வாசகர்களின் வீடுகளுக்கு தினமலர் குழு வினர் நேற்று விசிட் செய்தனர்.
கங்கா சந்திரசேகரன், நஞ்சுண்டாபுரம் ரோடு, மேபிளவர் அபார்ட்மென்ட்:
நவராத்திரி கொலுவை பொறுத்தவரை, நாங்கள் பரம்பரை பரம்பரையாக வைத்து வழிபாடு செய்து வருகிறோம். காஞ்சி மகாபெரியவர் எங்களுக்கு பிரசாதமாக கொடுத்த தேங்காயை, பல ஆண்டுகளாக கொலுவில் வைத்து பூஜை செய்து வருகிறோம்.
ஷோபா, நஞ்சுண்டாபுரம் ரோடு ஜாஸ்மின் அபார்ட் மென்ட்: கடந்த ஆண்டு எங்கள் வீட்டில், கல்யாணம் நடக்க வேண்டும் என்று கொலு வைத்தோம். கல்யாணம் நடந்தது. இப்போது குழந்தை வேண்டி கொலு வைத்து இருக்கிறோம்; குழந்தை பிறக்க போகிறது. நவராத்திரி கொலு வைத்து வழிபட்டால், அம்பாள் வேண்டிய வரம் கொடுப்பாள்.
உமா மகேஸ்வரன், திருவள்ளுவர் நகர், ராமநாதபுரம்: பூங்குளம் என்ற கிராமத்தை சித்தரித்து, கொலு வைத்து இருக்கிறோம். கிராமத்து திருவிழாவில் இடம் பெறும் காட்சிகளை வி ளக்கும் பொம்மைகளை வைத்து இருக்கிறோம். 100 வருட பழமையான கடவுள், பொம்மைகளும் இந்த கொலுவில் உள்ளன.
நி த்யா, ஸ்ரீவாரி மான்செஸ்டர் அபார்ட்மென்ட், உப்பிலிபாளையம்: எங்கள் அபார்ட்மென்டில் எல்லோரும் சேர்ந்து, கம்யூனிட்டி ஹாலில் கொலு வைத்து இருக்கிறோம். எல்லா வீடுகளில் இருந்து, பொம்மைகள் கொண்டு வந்து வைத்துள்ளனர். காலை, மாலை இரண்டு வேளையும் பூஜை நடக்கிறது.
அன்னபூரணி, ஜி.வி.ரெசிடென்சி: நான் 20 வருடமாக தொடர்ந்து நவராத்திரி கொலு வைத்து வருகிறேன். மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கிறது. அம்பாள் அனுக்கிரகம் இல்லம் முழுவதும் நிறைந்து இருக்கிறது.
செல்வி, பன்மால் ரோடு, ஜி.வி.ரெசிடென்சி
எங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை நவராத்திரி. மூன்று கலசங்களில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உருவங்களை செய்து கொலுவில் வைத்து பூஜை செய்து வருகிறோம். நவராத்திரி கொலு வைக்கும் போதுதான், வீடு கோயில் போல் இருக்கும்.
நிம்மி குமரன், டி.வி.ஹெச். அபார்ட்மென்ட்: நாங்கள் ஒரு வருடம் கூட தவறாமல், 25 வருடமாக கொலு வைத்து வருகிறோம். கொலு வைத்த நாளில் இருந்து தினமும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் சேர்ந்து வழிபாடு செய்து வருகிறோம். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கிறது.
சாரதா, திருச்சி ரோடு டி.வி.ஹெச்.அபார்ட்மென்ட்: இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொண்டாடும் பண்டிகைகளை மைய கருத்தாக வைத்து, கொலு வைத்து இருக்கிறோம். பெருமாள் தோற்றத்தில் இருக்கும் பிள்ளையார், கொலுவுக்கு இந்த ஆண்டின் புதுவரவு.
இந்த நவராத்திரி கொலு விழா கொண்டாடத்தை தினமலர் நாளிதழுடன் மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயுர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
தினமலர் குழுவினர் இன்று, சாயிபாபா காலனி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிக்கு கொலு விசிட் வருகின்றனர்.