UPDATED : நவ 24, 2026 02:46 PM
ADDED : நவ 24, 2026 02:46 PM
கோவை: 'தாய் பூமிக்கு ஒரு கடிதம்: இயற்கையை பாதுகாப்பேன் எனது உறுதிமொழி' என்ற தலைப்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
தபால் துறை நடத்தும் இப்போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர், மேற்பட்டோர் என இரு பிரிவுகளிலும் பங்கேற்கலாம்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், ஏ4 தாளில் 1,000 வார்த்தைகள் அல்லது உள்நாட்டு கடித அட்டையில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கையால் எழுத வேண்டும். இந்திய குடிமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். வயதை உறுதிப்படுத்தும் சான்றுடன், கடிதங்களை மாநில தபால் வட்ட தலைமை தபால் துறைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
கடந்த அக். 31ம் தேதியுடன் முடிவடைந்த கடிதங்கள் அனுப்புவதற்கான கால அவகாசம், தற்போது டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5,000 ரூபாயும், தேசிய அளவில் முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.
