/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய வட்ட சந்திப்பில் நுால்கள் வெளியீடு விழா
/
இலக்கிய வட்ட சந்திப்பில் நுால்கள் வெளியீடு விழா
ADDED : மார் 20, 2024 09:55 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மாத சந்திப்பு நிகழ்ச்சி, லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் கவிஞர் அவைநாயகன் எழுதிய ஐந்தாவது ைஹக்கூ நுாலான, 'சூரியச் செதில்களை' எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் வெளியிட்டார். இந்த நுால் வெளிவந்து பல ஆண்டுகளாகியும், காலத்தால் நிலைத்த இந்த நுாலினை மறுபதிப்பாக பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் லீலா எழுதிய மணிச்சிரல் ஹைக்கூ தொகுப்பினை, கவிஞர் பூபாலனும், எழுத்தாளர் சுப்ர பாரதிமணியன் எழுதிய, திரை நாவலை கவிஞர் மகரந்தன் வசந்தகுமாரனும் அறிமுகப்படுத்தினர்.
கவிஞர் மாணிக்கம் எழுதிய, 'கானம் பாடும் வானம்பாடி' கவிதை நுாலினை கவிஞர் மயிலவன் அறிமுகப்படுத்தினார்.
விழாவில் கவியரங்கம், படித்ததில் பிடித்தது நிகழ்வுகளில் இளம்படைப்பாளிகள், வாசகர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
கவிஞர்கள் சோலைமாயவன், செந்தில்குமார், காளிமுத்து ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

