/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகா பயிற்சி வகுப்பு; இளைஞர்களுக்கு வாய்ப்பு
/
யோகா பயிற்சி வகுப்பு; இளைஞர்களுக்கு வாய்ப்பு
ADDED : டிச 08, 2025 05:15 AM
கோவை: கோவையில் ஆர்.எஸ்.புரம் மற்றும் வடவள்ளியில் ஈஷா சார்பில், இளைஞர்களுக்கு இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஈஷா அறக்கட்டளை வாயிலாக நடத்தப்படும் முதல் நிலை யோகா வகுப்புகளில், 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.
மக்களின் உள்நிலை நலவாழ்வுக்காக, தொன்மையான யோக அறிவியலில் அடிப்படைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டமாக, ஆர்.எஸ்.புரம், வடவள்ளியில் இலவச ஏழு நாள் யோகா பயிற்சி, வரும் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
பயிற்சியின் வாயிலாக, இளைஞர்களுக்கு மனம் குவிப்பு திறன் அதிகரிப்பு, மன அழுத்தம் மற்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை, உடல், மனநிலையில் நீடித்த உற்சாகம் போன்ற பல்வேறு பயன்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: ஆர்.எஸ்.புரம்: 83000 93666, வடவள்ளி: 89395 68812.

