UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 08:14 PM
அன்னூர்: அன்னூரில் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு வரும் 5ம் தேதி துவங்குகிறது.
அன்னூர், அ.மு. காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த மனவளக்கலை யோகா அடிப்படை பயிற்சி வகுப்பு இங்கு துவங்குகிறது.
வருகிற 5ம் தேதி மாலை 4:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இதன் பின்னர் தொடர்ந்து, 12 நாட்கள் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை வகுப்பு நடைபெறுகிறது. இந்த வகுப்பில், எளிய முறை உடற்பயிற்சி, உயிர்வளத்திற்கு காயகல்ப பயிற்சி, மன அமைதிக்கு தியானம் ஆகியவை கற்றுத் தரப்படும். இப்பயிற்சி பெறுவதாலும், தொடர்ந்து செய்வதாலும், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மேம்படும். தீய எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் உருவாகும்.
'மேலும் விவரங்களுக்கு, 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என, மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
