/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 25, 2025 12:30 AM
கோவை: கோவை மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு தொகுப்பூதிய அடிப்படையில், ஒரு பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் செயலி பயிற்சியாளர் தொழிற்பிரிவில், காலியாக உள்ள ஒரு பணியிடத்துக்கு பொது போட்டி முன்னுரிமை அல்லாத இன சுழற்சி அடிப்படையில், கல்வி தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்.எஸ்.எல்.சி., அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி, மின்னணுவியல் துறையில் டிப்ளமோ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பது அவசியம். செப்., 30 மாலை 5.30 மணிக்குள் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் ஜி.என்., மில்ஸ் அஞ்சல் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.