/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளியில் எவ்வளவு ஸ்வீட் வேண்டுமானாலும் சாப்பிடலாம்
/
தீபாவளியில் எவ்வளவு ஸ்வீட் வேண்டுமானாலும் சாப்பிடலாம்
தீபாவளியில் எவ்வளவு ஸ்வீட் வேண்டுமானாலும் சாப்பிடலாம்
தீபாவளியில் எவ்வளவு ஸ்வீட் வேண்டுமானாலும் சாப்பிடலாம்
ADDED : அக் 10, 2025 12:31 AM
தி த்திக்கும் ஸ்வீட்டுகள் இல்லாமல் தீபாவளி முழுமை பெறாது. இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் என வீடு முழுவதும் பலகாரங்களாக இருக்கும். கொண்டாட்ட உற்சாகத்தில் மிகுதியாக சாப்பிடுவோம். இதனால், அஜீரணம், செரிமானக்கோளாறு என, வயிறு சார்ந்த பிரச்னைகளும் கூடவே தொற்றிக்கொள்ளும். இதற்கு எளிய மருந்து, தீபாவளி லேகியம்.
சுக்கு, மிளகு போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால், இதற்கு தீபாவளி மருந்து என்ற பெயரும் உண்டு. கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே தீபாவளி லேகியம் செய்து, சாப்பிடுவதே சிறந்தது.
சரி...எப்படி செய்வது?
தேவையான பொருட்கள் மிளகு - 25 கிராம், சீரகம் - 25 கிராம், காய்ந்த இஞ்சி 50கி. சுக்கு- ஒரு துண்டு, திப்பிலி 10 கிராம், நெய் 100 கிராம், வெல்லம் 200 கிராம், தேன் நான்கு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
வெல்லம், நெய், தேன் தவிர மற்ற பொருட்களை, லேசாக வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதை, 10 நிமிடம் நீரில் ஊற வைத்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், அரைத்த விழுதை கொட்டி, மிதமான தீயில் வைத்து கிளறவும். இடையிடையே வெல்லம், நெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, நன்கு கிளறினால் லேகியம் தயார்! வயிற்று பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே, காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பலகாரங்கள் சாப்பிட்டதும் மதியம், மாலை வேளையில் மீண்டும் ஒரு முறை சாப்பிடலாம். தீபாவளி சமயங்களில் மட்டுமின்றி, எப்போதும் தயார் செய்து வைத்து, வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இது, செரிமானம் சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்கும். மழைக்கால சளி தொந்தரவுகளுக்கும், தீபாவளி லேகியம் சிறந்த மருந்தாகும்.