/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேமிப்பு வட்டியை வைத்தே வீட்டுக்கடன் வட்டி கட்டலாம்! இப்படியும் வழி இருக்கிறது என்று யோசனை

ADDED : ஜூலை 18, 2025 09:50 PM
கோவை; ‛சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்தே, சில மாதங்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டியை செலுத்தி விடலாம்' என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வக்கீல் நாகராஜன் கூறியதாவது:
எதிர்பாராத சூழலில், வங்கிக் கடனுக்கான பிரதிமாத தவணை தொகையை, சில மாதங்களுக்கு செலுத்த இயலாமல் போய் விட்டால், மீண்டும் கடனை செலுத்த முன்வரும் போது, செலுத்தாமல் விட்ட மூன்று மாதங்களுக்கான வட்டித் தொகையை கணக்கிட்டு, மொத்தமாக திருப்பி செலுத்தி விட வேண்டும்.
வங்கியில் கடன் பெறும் போது, முடிந்தவரை, திருப்பி செலுத்தும் கால அளவு குறைவாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இது, வாடிக்கையாளர்களின் விருப்புரிமை.
மாறாக, நீண்டகாலத்துக்கு கடனை நிலுவையிலேயே வைத்துக் கொண்டால், புதிய கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, எதிர்பாராத தொகையை விட குறைவாக கிடைக்கும். மொத்த கடன் காலத்தில், அசலை விட அதிகமாக வட்டியை செலுத்தியிருப்பீர்கள். இதில், கவனம் தேவை.
இ.எம்.ஐ., தவணை தொகையை பிடித்தம் செய்து கொள்ள, போதியளவு பணம் வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டும். சில ஆண்டுகளில் வீடு கட்டுவது என தீர்மானித்து விட்டால், அதற்கு முன்பாகவே, தங்களது சேமிப்பில் ஒரு பகுதியை, ரெக்கரிங் டெபாசிட்டாகவோ அல்லது மியூச்சுவல் பண்ட் வாயிலாகவோ, பிரதி மாதம் முதலீடு செய்து வந்தால், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்தே, சில மாதங்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டியை செலுத்தி விடலாம்.
இச்சமயத்தில், வீட்டுக் கடனுக்கான வட்டி சதவீதத்தை விட, கூடுதலாக வட்டி கிடைக்கக் கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பொதுமக்கள் வங்கியில் வீட்டுக்கடன் பெறும் போதே, தங்கள் குடும்ப வாரிசுகளின் பாதுகாப்பு கருதி, அதே வங்கியில் இன்சூரன்ஸ் திட்டங்களில் சேர்ந்து, பாலிசி எடுத்துக் கொள்ளலாம். அச்சமயங்களில் வாடிக்கையாளர் எதிர்பாராமல் காலமாகி விட்டால், வீட்டுக்கடனை மொத்தமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செலுத்தி விடும்.
வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்படாது. இதில், கவனிக்க வேண்டிய அம்சம் யாதெனில், எவ்வாறு வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ., செலுத்துகிறோமோ, அதே போல், இன்சூரன்ஸ் பிரீமிய தொகையையும், தவறாமல் பிரதி மாதம் செலுத்தி, நிலுவையின்றி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் பலனை பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.