/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வார்டில் பணி துவங்கினால் தான் ஓட்டு கேட்க முடியும்! நகராட்சி கூட்டத்தில் தலைவரே அறிவிப்பு
/
வார்டில் பணி துவங்கினால் தான் ஓட்டு கேட்க முடியும்! நகராட்சி கூட்டத்தில் தலைவரே அறிவிப்பு
வார்டில் பணி துவங்கினால் தான் ஓட்டு கேட்க முடியும்! நகராட்சி கூட்டத்தில் தலைவரே அறிவிப்பு
வார்டில் பணி துவங்கினால் தான் ஓட்டு கேட்க முடியும்! நகராட்சி கூட்டத்தில் தலைவரே அறிவிப்பு
ADDED : மார் 01, 2024 12:30 AM

பொள்ளாச்சி;'வார்டில் பணிகளை துவங்கினால் தான், தேர்தலில் ஓட்டு கேட்க செல்ல முடியும்,' என, நகராட்சி அவசர கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சியில் திட்டங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருப்பதாகவும், ஒருநாள் இடைவெளியில் அனைத்து வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் புகழாரம் பாடினர்.
அப்போது குறுக்கிட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, ''எனது வார்டில், ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டும், ராஜாமில் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்பு வாயிலாக, ஆங்காங்கே கம்பங்கள் அமைக்கப்பட்டு, இணைப்புகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன.
இந்நிலையில், அவைகளை அகற்ற வேண்டும். அதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. கால்வாயில் அகற்றப்படும் கழிவுகள், நீண்ட நாட்களுக்கு பின் அப்புறப்படுத்தப்படுகின்றன,' என்றார்.
பதிலளித்த அதிகாரிகள், 'ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, ஒவ்வொரு சாலையும் புதுப்பிக்கப்படுகிறது. ஏ.சி.டி., தொலைத்தொடர்பு கம்பங்கள் கலெக்டர் உத்தரவின் பேரில் அமைக்கப்படுகிறது. இதற்காக, நகராட்சிக்கு, 13 லட்சத்து, 500 ரூபாய் பெறப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கம்பங்கள் மாற்றியமைக்கப்படும்,' என, தெரிவித்தார்.
இதையடுத்து, தி.மு.க., கவுன்சிலர்கள் ஒவ்வொரும், தங்கள் வார்டின் புதிய திட்டப் பணிக்கு அச்சாரமிடும் வகையில், ஒதுக்கிய திட்டப் பணிகளை குறிப்பிட்டு பேசினர்.
குறுக்கிட்ட தலைவர், ''நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், 44 புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு, 'ஒர்க்ஆர்டர்' போடப்படாமல் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால் நாங்கள் இங்கே வர முடியாது. இன்னும் ஐந்து நாட்களுக்குள் 'ஒர்க்ஆர்டர்' கொடுக்கணும். அப்போது தான், வரும் தேர்தலுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க செல்ல முடியும்,'' என்றார்.
நகராட்சியின் அவசர கூட்டம், ஒவ்வொரு வார்டிலும் ஒதுக்கிய பணி விபரங்களை தெரியப்படுத்தும் வகையிலும், தேர்தல் அறிவிப்புக்கு முன், திட்டப் பணிகளுக்கான 'ஒர்க்ஆர்டர்' வழங்குவதற்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

