ADDED : ஆக 15, 2026 04:11 PM

அ நிறம் | அளவு
மலுமிச்சம்பட்டி: ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கர்னல் ஜாய் தாஸ்குப்தா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
'ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்கும்போது ஏற்படும் சிறிய தடைகளைக் கண்டு பின்வாங்காமல், விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்,' என்றார்.
கல்லூரி தலைவர் மஹாவீர் போத்ரா, செயலாளர் சுனில்குமார் நஹாடா, கோவை நலச்சங்கம் மற்றும் எஸ்.என்.வி. பள்ளி செயலாளர் கோபால் புராடியா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
