/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்படி சொல்லீட்டீங்களே! கொரோனா காலத்துக்கு பின் பஸ் சேவை பாதிப்பு; காலிப்பணியிடங்கள் நிரப்பினால் இயல்பாகுமாம்
/
இப்படி சொல்லீட்டீங்களே! கொரோனா காலத்துக்கு பின் பஸ் சேவை பாதிப்பு; காலிப்பணியிடங்கள் நிரப்பினால் இயல்பாகுமாம்
இப்படி சொல்லீட்டீங்களே! கொரோனா காலத்துக்கு பின் பஸ் சேவை பாதிப்பு; காலிப்பணியிடங்கள் நிரப்பினால் இயல்பாகுமாம்
இப்படி சொல்லீட்டீங்களே! கொரோனா காலத்துக்கு பின் பஸ் சேவை பாதிப்பு; காலிப்பணியிடங்கள் நிரப்பினால் இயல்பாகுமாம்
ADDED : நவ 01, 2024 10:19 PM
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டுமென, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பலர், வேலைக்கு செல்லவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும் பஸ் பயணத்தை நம்பியுள்ளனர்.
தினமும் கிணத்துக்கடவு வழியாக மட்டும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர்.
கொரோனா காலத்தில், பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டது. அதன்பின், அரசு அறிவுறுத்தலின் படி பஸ் போக்குவரத்து சிறிது சிறிதாக அதிகரிக்கத்துவங்கியது. ஒரு சில இடங்களில், பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதில், கிணத்துக்கடவு - நெகமம் வழியாக செல்லும், 'கே 3' அரசு டவுன் பஸ், கொரோனாவுக்கு பின், காலை மற்றும் மாலை நேரங்களில் செல்வதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு - வேளந்தாவளம் வரை இயங்கி வந்த பஸ், கொரோனா பாதிப்பு காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின், தற்போது வரை அந்த பஸ் இயக்கப்படவில்லை.
இதனால், சொக்கனுார், பொட்டையாண்டிபுறம்பு மற்றும் வடபுதுார் பகுதியில் இருக்கும் மக்கள் பலர், பைக், ஆட்டோ மற்றும் 'கேப்' வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கி வந்தாலும், 'கே 2' என்ற பஸ் இயங்கிய நேரத்திற்கு பஸ் இல்லை.
இதுமட்டும் இன்றி, பொள்ளாச்சியில் இருந்து குரும்பபாளையம், செங்குட்டைபாளையம் வழியாக நெகமம் செல்லும் அரசு பஸ், ஒரு சில நாட்கள் இரவு நேரத்தில் வருவதில்லை. இதற்கு மாற்றாக, இவ்வழித்தடத்தில் இரண்டு தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
விடுமுறை நாட்களில் இந்த பஸ்களும் இரவு நேரம் வருவதில்லை. இதனால் மக்கள் செய்வதறியாமல் உள்ளனர்.
தற்போது, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கொரோனாவுக்கு முன் இருந்த நிலையை விட, மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது. ஆனால், கிணத்துக்கடவு வட்டாரத்தில் பல இடங்களில் இன்னும் பஸ் வசதியே இல்லை.
பஸ் செல்லாத ஊர்களில் உள்ள மக்கள், தற்போது வரை பல கி.மீ., தூரம் நடந்து சென்றே பஸ் வசதி பெறுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை போக்குவரத்து கழக அதிகாரிகள் களஆய்வு செய்து, மக்கள் நலன் கருதி, நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும்.
மேலும், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லூரிகள் இருக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும், என, பஸ் பயணியர் வலியுறுத்துகின்றனர்.