/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீங்களும் ஆகலாம் போலீஸ்: எஸ்.ஐ., இலவச மாதிரி தேர்வு தருது வாய்ப்பு
/
நீங்களும் ஆகலாம் போலீஸ்: எஸ்.ஐ., இலவச மாதிரி தேர்வு தருது வாய்ப்பு
நீங்களும் ஆகலாம் போலீஸ்: எஸ்.ஐ., இலவச மாதிரி தேர்வு தருது வாய்ப்பு
நீங்களும் ஆகலாம் போலீஸ்: எஸ்.ஐ., இலவச மாதிரி தேர்வு தருது வாய்ப்பு
ADDED : அக் 16, 2025 05:46 AM
கோவை: காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு நடத்தப்படும் இலவச மாதிரி தேர்வை பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 1,299 காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு, டிச., 21ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று வரும், 18 வயதுக்கு மேற்பட்ட 28 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவச மாதிரித் தேர்வு, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று துவங்கியது.
வரும் 22, 29, நவ., 5, 12, 19, 26ம் தேதிகள், டிச., 3, 10, 17ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதிரி தேர்வு முடிந்த அன்றே, தேர்வுக்கான விடை குறிப்புகள் மற்றும் மதிப்பெண் விவரங்கள், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்புவோர், 0422 - 2642388, 94990 55937 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து பயனடைய வேண்டும் என, மாவட்ட கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.