/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பேன்டசி கிரிக்கெட்' செயலியில் பணத்தை இழந்த இளைஞர்
/
'பேன்டசி கிரிக்கெட்' செயலியில் பணத்தை இழந்த இளைஞர்
'பேன்டசி கிரிக்கெட்' செயலியில் பணத்தை இழந்த இளைஞர்
'பேன்டசி கிரிக்கெட்' செயலியில் பணத்தை இழந்த இளைஞர்
ADDED : ஜூன் 04, 2025 12:44 AM
கோவை :
'பேன்டசி கிரிக்கெட்' செயலியை 'அப்டேட்' செய்த போது, வங்கி கணக்கில் இருந்த பணம் பறிபோய் விட்டதாக, இளைஞர் ஒருவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
'பேன்டசி கிரிக்கெட்' செயலி என்பது, ஒரு போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்களை தேர்வு செய்து, 'பெட்டிங்' செய்யும் செயலியாகும்.
இணையத்தில் பல பேன்டசி செயலிகள் உள்ளன. ஐ.பி.எல்., போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து, கோடிக் கணக்கானோர் பேன்டசி செயலிகளை பதிவிறக்கம் செய்து, 'பெட்டிங்' செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'பேன்டசி கிரிக்கெட்' செயலியில், கடந்த ஐ.பி.எல்., போட்டிக்கு பெட்டிங் செய்திருந்தார்.
போட்டியின் நடுவில் செயலியை, 'அப்டேட்' செய்யும்படி காண்பித்துள்ளது. அவர் செயலியை 'அப்டேட்' செய்தார். அப்போது, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.7,500 மாயமாகியுள்ளது.
இது குறித்து இளைஞர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.