/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிரேக் அப்' செய்த பெண்ணின் புகைப்படத்தை ஆத்திரத்தில் சகோதரிக்கு அனுப்பிய வாலிபர்
/
'பிரேக் அப்' செய்த பெண்ணின் புகைப்படத்தை ஆத்திரத்தில் சகோதரிக்கு அனுப்பிய வாலிபர்
'பிரேக் அப்' செய்த பெண்ணின் புகைப்படத்தை ஆத்திரத்தில் சகோதரிக்கு அனுப்பிய வாலிபர்
'பிரேக் அப்' செய்த பெண்ணின் புகைப்படத்தை ஆத்திரத்தில் சகோதரிக்கு அனுப்பிய வாலிபர்
ADDED : நவ 01, 2024 12:29 AM
கோவை : காதலித்த பெண் 'பிரேக் அப்' செய்த ஆத்திரத்தில் அவருடன் எடுத்த புகைப்படங்களை அவரின் சகோதரிக்கு அனுப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பீளமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்ப கல்லுாரியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் கல்லுாரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர், 2016ம் ஆண்டு முதல் துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ், 21 என்பவரை காதலித்து வந்துள்ளார்.
காதலிக்கும் போது, இருவரும் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண், யுவராஜின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அவருடனான உறவை முடித்துக்கொண்டார்.
இதையடுத்து, ஆத்திரத்தில் இருந்த யுவராஜ் அப்பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளார். அவர் அழைக்கும் போதெல்லாம் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம், பெண்ணை கட்டாயப்படுத்தி அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்திற்கு வர கூறினார். என்ன செய்வது என்று தெரியாத மாணவி, பெங்களூரில் பணியாற்றும் தனது சகோதரியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
பின்னர் தனது சகோதரியுடன் கொடிசியா மைதானத்திற்கு சென்றார். அங்கு காத்திருந்த யுவராஜ், இளம் பெண்ணை சகோதரியுடன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, அந்த பெண்ணை யுவராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அதன் பின்னர் யுவராஜ் மற்றும் மாணவி தனிமையில் எடுத்த புகைப்படங்களை, மாணவியின் சகோதரிக்கு அனுப்பினார். சம்பவம் தொடர்பாக மாணவி, கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் போரில் போலீசார் வாலிபர் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.