தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மோட்டார்களை திருடிய  இளைஞர்கள் கைது 

மோட்டார்களை திருடிய  இளைஞர்கள் கைது 

மோட்டார்களை திருடிய  இளைஞர்கள் கைது 


ADDED : ஆக 30, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: விளைநிலங்களில் மின்மோட்டார் மற்றும் கேபிள் வயர்கள் திருடி வந்த, மூன்று பேர் கொண்ட கும்பலை மடத்துக்குளம் போலீசார் கைது செய்தனர்.

மடத்துக்குளம் வட்டாரத்தில், விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து பல்வேறு விவசாய சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர்வெல்களை இயக்க மின் இணைப்புடன் பயன்படுத்தப்படும் கேபிள் வயர்கள் அப்பகுதியில் அடிக்கடி திருடு போனது.

இது குறித்து விவசாயிகள் மடத்துக்குளம் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மடத்துக்குளம் பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி, மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, விளைநிலங்களில் இருந்து கேபிள் வயர்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

தொடர் விசாரணையில், அவர்கள் மடத்துக்குளம் கே.டி.எல்., பகுதியைச்சேர்ந்த ஹரி, 24; நரசிங்காபுரம் காளியம்மன் கோவில் வீதியைச்சேர்ந்த சிவக்குமார், 23; ராஜா வீதியைச்சேர்ந்த பிரதீப், 20 என்பதும் தெரிய வந்தது.

சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள விளைநிலங்களில் இருந்து மோட்டார் மற்றும் கேபிள் வயர்களை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விளைநிலங்களில் மோட்டார், கேபிள் வயர்களை இளைஞர்கள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us