/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் ஓட்டு; உங்கள் உரிமை; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
/
உங்கள் ஓட்டு; உங்கள் உரிமை; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
உங்கள் ஓட்டு; உங்கள் உரிமை; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
உங்கள் ஓட்டு; உங்கள் உரிமை; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 28, 2024 05:42 AM
பெ.நா.பாளையம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
வரும், 2025ம் ஆண்டு ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அதாவது, டிச., 31, 2006ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் ஏதுவாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள அக்., 29 முதல் நவ., 29 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அரசு விடுமுறை தவிர்த்து, வேலை நாட்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்ப படிவங்களை நேரில் அளிக்கலாம். 17 வயது முடிவடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள நியமன அலுவலர்களிடம் வழங்கலாம்.
மேலும், ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், Voters Helpline என்ற மொபைல் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.