/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
500 கி.மீ., துாரத்தை 15 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து இளைஞர் சாதனை பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு

ADDED : டிச 08, 2025 05:53 AM

கோவை: பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தி, 500 கி.மீ., துாரத்தை 15 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
'பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள், சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து விழிப்புடன் இருங்கள், போதைப் பொருட்களுக்கு நோ சொல்வோம்...' என்பனஉள்ளிட்ட கருப்பொருட்களை மையமாக கொண்டு, கோவையை சேர்ந்த சைக்கிள் வீரர் விஷ்ணுராம் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
பயணத்தை நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் துவங்கினார். நேற்று காலை 6:38 மணிக்கு, கோவையில் நிறைவு செய்தார்.
பயணத்தை ராமநாதபுரம் எஸ்.பி., சத்தீஷ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பல்லடம் வழியாக, 500 கி.மீ., தொலைவை 15 மணி நேரம், 8 நிமிடங்களில் கடந்து, கோவையை விஷ்ணுராம் அடைந்தார்.
மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், கோவை மாநகர துணை கமிஷனர் (வடக்கு) தேவநாதன், தலைமையிடத்து துணை கமிஷனர் திவ்யா ஆகியோர் கோவை விமான நிலையத்தில் இருந்துல, விஷ்ணுராமுடன் சைக்கிள் பயணத்தில் பங்கேற்றனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், விஷ்ணுராம் தனது பயணத்தை நிறைவு செய்தார். தொடர்ந்துவிழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும்நடந்தது.
விஷ்ணுராம் கூறுகையில்,''சமீபத்தில் கோவையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம், விழிப்புணர்வு பயணத்தை ஏற்படுத்த துாண்டியது.
காவல் உதவி செயலி, பெண்கள், குழந்தைகள் உதவி எண், பிங்க் பேட்ரோல், ஆகியவை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. சைபர் குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.