/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடத்தில் கம்பி திருடிய வாலிபர் கைது
/
கட்டடத்தில் கம்பி திருடிய வாலிபர் கைது
ADDED : மே 13, 2025 11:55 PM
தொண்டாமுத்தூர்; பேரூர் செட்டிபாளையத்தில், புதியதாக கட்டி வரும் கட்டடத்தில், இரும்பு கம்பிகளை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுககவுண்டனூரை சேர்ந்தவர் பிரவீன்,33. இவர், பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில், புதியதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகள் நடந்து வருவதால், தினமும் அங்கு சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல, கட்டுமான பணிகளை பார்ப்பதாக பிரவீன் சென்றார். அப்போது, வாலிபர் ஒருவர், கட்டடத்தில் வைத்திருந்த இரும்பு கம்பியை திருடிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட பிரவீன், கம்பி திருட்டில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அந்நபர் குனியமுத்தூரை சேர்ந்த அனீஷ்,22 என்பது தெரியவந்தது. புகாரின்படி, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அனீஷை கைது செய்தனர்.