/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
/
அரசு மருத்துவமனையில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 26, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே சிக்கன் கம்பெனியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துப்பில் வரலா,22, வேலை செய்து வந்தார்.
தலைவலியால் அவதிப்பட்ட இவர், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகாததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், 'தலையில் எந்த பிரச்னையும் இல்லை' என்று கூறி, சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்தனர்.
மடத்துக்குளம் திரும்பியவர், மீண்டும் தலைவலி ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். நள்ளிரவில் கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.