/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெட்ரோல் குண்டு வீச்சு காயமடைந்த வாலிபர் பலி
/
பெட்ரோல் குண்டு வீச்சு காயமடைந்த வாலிபர் பலி
ADDED : பிப் 03, 2025 04:05 AM

பாலக்காடு : பாலக்காடு ஒற்றைப்பாலம் பெட்ரோல் குண்டு வீச்சில், படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கொயிலாண்டி பகுதியைச்சேர்ந்தவர்கள் விஷ்ணு 27, பிரியேஷ் 34. கட்டுமான தொழிலாளிகளான இவர்கள் உட்பட ஆறு பேர், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் சுனங்காடு வாணிவிலாசினி என்ற பகுதியில், புதிதாக கட்டும் வீட்டின் கட்டுமான பணிகள் செய்து அங்கேயே தங்கி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜன., 13ல் அதிகாலை 2.30 மணி அளவில், அந்த வீட்டின் சிட் அவுட்டில் உறங்கிக்கொண்டிருந்த இவர்கள் மீது, அப்பகுதியைச் சேர்ந்த நீரஜ், 34, பெட்ரோல் குண்டு வீசி தப்பிச்சென்றார். இதில் படுகாயமடைந்த விஷ்ணு மற்றும் பிரியேஷை, அப்பகுதி மக்கள் திருச்சூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஒற்றைப்பாலம் போலீசார் நீரஜை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கட்டுமான தொழிலாளிகள் கேலி செய்வதில் ஆத்திரமடைந்த நீரஜ், இப்படி ஒரு விபரீதம் செய்ய துணிந்தார் என்பது தெரிந்தது.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரியேஷ் குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.