/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுவா கோப்பை கால்பந்து; விவேகம் பள்ளி வெற்றி
/
யுவா கோப்பை கால்பந்து; விவேகம் பள்ளி வெற்றி
ADDED : செப் 16, 2025 10:33 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தில் உள்ள யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், மாவட்ட அளவிலான யுவா கோப்பைக்கான கால்பந்து போட்டி நடந்தது. கூடலுார் நகராட்சி தலைவர் அறிவரசு, யுவா பப்ளிக் பள்ளி தலைவர் சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 30 அணிகள் பங்கேற்றன.
மாணவர் பிரிவில் விவேகம் மெட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது. யுவா பப்ளிக் பள்ளி இரண்டாமிடம், லிஸ்யூ மெட்ரிக் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன.
மாணவியர் பிரிவில் மணி மேல்நிலைப்பள்ளி 'ஏ' பிரிவு முதலிடம், அதே பள்ளியின் 'பி' பிரிவு இரண்டாமிடம் பிடித்தன. பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி மூன்றாமிடம் பிடித்தது.
பரிசளிப்பு விழாவுக்கு தாளாளர் சத்யா தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை, யுவா பப்ளிக் பள்ளி நிர்வாகம் செய்து இருந்தது.