/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுவா பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா
/
யுவா பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா
ADDED : டிச 27, 2025 05:19 AM

பெ.நா.பாளையம்: நாயக்கன்பாளையத்தில் உள்ள யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மழலையர் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டு விழா நடந்தது.
இயன்முறை மருத்துவர் கண்ணபிரான் போஜன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
கூட்டு உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சிறப்பு விருந்தினர்களாக கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா, அறங்காவலர்கள் கோகிலா, ரமேஷ், ஜெகதீசன், பால்ராஜ், திருமூர்த்தி, ராஜேந்திரன் பங்கேற்றனர்.
மூத்த ஆசிரியர் நித்யா நன்றி கூறினார்.

