தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்டசபை தேர்தல் பணிக்கு மண்டல குழுக்கள் நியமனம்

 சட்டசபை தேர்தல் பணிக்கு மண்டல குழுக்கள் நியமனம்

 சட்டசபை தேர்தல் பணிக்கு மண்டல குழுக்கள் நியமனம்


ADDED : மார் 08, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, கோவை மாவட்ட நிர்வாகம் படுவேகமாக செய்து வருகிறது. பறக்கும் படை, கண்காணிப்பு குழு, செலவின கண்காணிப்பு குழுக்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக, 10 தொகுதிகளுக்கும் தற்போது மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள், உதவியாளர்கள் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பணிபுரிய வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பவன்குமார் அறிவுறுத்தியிருக்கிறார்.

தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'ஒவ்வொரு தொகுதிக்கும் ஓட்டுச்சாவடி எண்ணிக்கைக்கு ஏற்ப மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்படும். ஸ்ட்ராங் ரூமில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களை கண்காணித்தல், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ஓட்டுப்பதிவை அறிந்து ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தல், ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை மையமான ஜி.சி.டி. கல்லுாரியில் சேர்ப்பித்தல் மற்றும் ஓட்டுச்சாவடியில் நிகழும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மண்டல குழுக்களே பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு குழுவினரும் பணியாற்ற வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us