/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல கிரிக்கெட் போட்டி; எஸ்.ஆர்.ஐ.டி., அணி சபாஷ்
/
மண்டல கிரிக்கெட் போட்டி; எஸ்.ஆர்.ஐ.டி., அணி சபாஷ்
ADDED : செப் 30, 2025 11:06 PM

கோவை; அண்ணா பல்கலை 10வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையே மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது. ஏழு நாட்கள் நடந்த இப்போட்டியில், 26 அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின.
இறுதி போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் (எஸ்.ஆர்.ஐ.டி.,), ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின. ஸ்ரீ ராமகிருஷ்ணா அணியினர், 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 121 ரன் எடுத்தனர்.
ஈஸ்வர் கல்லுாரி அணியினர், 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 115 ரன் எடுத்து இரண்டாமிடம் பிடித்தனர். மூன்றாமிடத்தை மகாலிங்கம் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், நான்காமிடத்தை இந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, எஸ்.ஆர்.ஐ.டி., முதல்வர் டேவிட் ரத்னராஜ், கோப்பை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் வேலுசுவாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.