மண்டல விளையாட்டு போட்டிகள் எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி சாம்பியன்
மண்டல விளையாட்டு போட்டிகள் எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி சாம்பியன்
ADDED : செப் 03, 2026 05:11 PM
மேட்டுப்பாளையம், செப். 4-
கோவையில் நடந்த மண்டல தடகள போட்டிகளில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.
கோவை நேரு விளையாட்டு அரங்கில், மேட்டுப்பாளையம் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகளில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதிக வெற்றி புள்ளிகளை பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று, முதலிடம் பிடித்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயகண்ணன், முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
_____
படம் உண்டு.
