/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மும்பை குண்டு வெடிப்பு எதிரொலி : சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை
/
மும்பை குண்டு வெடிப்பு எதிரொலி : சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை
மும்பை குண்டு வெடிப்பு எதிரொலி : சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை
மும்பை குண்டு வெடிப்பு எதிரொலி : சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை
ADDED : ஜூலை 15, 2011 12:55 AM
சிதம்பரம் : மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சிதம்பரம் ரயில் நிலயத்தில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிதம்பரம் ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயிலில் உள்ள பொருட்களை ரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.
மதியம் 12 மணிக்கு சிதம்பரம் வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை செய்யப்பட்டது. ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.