/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் அறிமுக விழா
/
கடலூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் அறிமுக விழா
ADDED : ஜூலை 13, 2011 01:30 AM
கடலூர் : கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கிஅனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பேராசிரியர்கள் விளக்கினர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் பேசுகையில், மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் பேராசிரியர்கள் கல்வியை போதிப்பார்கள். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். விழாவில் வரலாற்று பேராசிரியர் காந்திமதி உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.