/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியோர் இல்லத்தில் மருத்துவர் தின விழா
/
முதியோர் இல்லத்தில் மருத்துவர் தின விழா
ADDED : ஜூலை 13, 2011 01:35 AM
கடலூர் : இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் கிளை சார்பில் தாமரைக்குளம் முதியோர் இல்லத்தில் குடும்ப விழா நடந்தது.
பின்னர் நடந்த விழாவில் சமையல், ஓவியம், கட்டுரை மற்றும் பலூன் உடைத்தல், பன் சாப்பிடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சங்கத் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., வனிதா முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு எஸ்.பி., பகலவன் பரிசு வழங்கிப் பேசினார். விழாவில் சிறந்த டாக்டர்களாக கிருஷ்ணவேணி, குமுதம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சங்க இணைய தளம் மற்றும் காலாண்டு செய்தி மலர் வெளியிடப்பட்டது. டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, நமச்சிவாயம், கிருஷ்ணகி÷ஷார், சசிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.