/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் பயண முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
ரயில் பயண முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 05, 2011 11:47 PM
கடலூர்: ரயிலில் பயணம் செய்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடலூரில் நடந்தது.
கடந்த 1985ம் ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை சென்ற ரயிலில் சிதம்பரத்திற்குச் சென்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கடலூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக கணிதவியல் துணை பேராசிரியர் தில்லை கோவிந்தன், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேலாளர் லட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கடந்த 85ம் ஆண்டு இயங்கிய போது கல்லூரி நேரத்திற்கு மாணவர்கள் செல்லும் வகையில் ரயில்களை இயக்க வேண்டும். பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட ஊர்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்திப் பேசினர். நிகழ்ச்சியில் கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விஜய பாஸ்கரன், வாசு, பற்குணம், செந்தில், சண்முகம், சுதர்சனம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.