ADDED : ஜூலை 13, 2011 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் ஆண்டு முதல் கூட்டம் தங்க நகை
வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடந்தது. சங்க தலைவர் மதன்சந்த் தலைமை
தாங்கினார். முன்னாள் தலைவர் சந்தானகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் பாஸ்கர்,
பொருளாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தொழில்
வர்த்தக சங்க தலைவர் சண்முகம், முன்னாள் தலைவர் துரை, தேர்வு தலைவர்
மதிவாணன், தொழிலதிபர்கள் சந்திரசேகர், ராமமூர்த்தி, சம்பத்லால்,
அசோக்ராஜ்ஜெயின், தி.மு.க.,நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
விழாவில் ரோட்டரி அறக்கட்டளைக்கு அதிக நிதி வழங்கிய முன்னாள் தலைவர்
ராமமூர்த்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு அரிமா
சங்கத்துடன் இணைந்து சேவையாற்ற தீர்மானிக்கப்பட்டது.