/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம் விண்ணப்பம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம் விண்ணப்பம்
ADDED : ஜூலை 13, 2011 01:39 AM
கடலூர் : கடலூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரத்திற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி ஆக., 21ம் தேதி ஈரோட்டிலும், செப்., 4ம் தேதி சென்னையிலும் நடக்கிறது. கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரத்திற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் மாற்றுத் திறனாளிகளிடம் விண்ணப்பங்களை வழங்கினார். மாவட்டத் தலைவர் சந்தோஷ், செயலர் மனோகர், செய்தி தொடர்பாளர் சண்முகம், தாமஸ், ஜெயபாலன் உடனிருந்தனர்.