/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக்கை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக்கை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2011 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:கச்சிராயநத்தம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம்
கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது.
இதனால் அப்பகுதி இளைஞர்கள்
பாதிக்கப்படுவதால் கடையை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து
வந்தனர்.இதை டாஸ்மாக் நிர்வாகம் கண்டுகொள்ளாததால், கிராம பொதுமக்கள்
மற்றும் மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், டாஸ்மாக் கடையை
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு மைய
நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், ஜெகதீசன், முத்துராமன், வேலழகன் உட்பட பலர்
பங்கேற்றனர்.