/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார செவிலியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
சுகாதார செவிலியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : ஜூலை 08, 2024 04:39 AM

புவனகிரி: பி.முட்லுார் சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செவிலியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா புவனகிரியில் நடந்தது.
பி.முட்லுார் சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றியவர் மல்லிகா. இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா புவனகிரியில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர் லோகேஸ்வரி, புவனகிரி பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மருந்தாளுநர் வனஜா வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர் சண்முகசுந்தரம், முகமது அலி, வெங்கடாஜலபதி, முருகன், முகவர் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
புவனகிரி தமிழ்ப்பேரவை சங்க செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
ஓய்வு பெற்று சுகாதார செவிலியர் மல்லிகா ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.