நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : மைத்துனர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டு, நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 48. இவரது சகோதரர் செந்தாமரைக்கண்ணன். இருவரது குடும்பமும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வெங்கடேசன் தனது மனைவி ஆதிலட்சுமி சமையல் செய்யாததால் கண்டித்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த செந்தாமரைக்கண்ணன் மனைவி, கன்னியம்மாள் ஆத்திரமடைந்து வெங்கடேசன் மீது சுடுதண்ணீரை ஊற்றினார்.
இதில் அவரது கால்களில் தீக்காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து ஆதிலட்சுமி குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கன்னியம்மாள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.