/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்வதேச இளைஞர் நாள் பண்ருட்டியில் அனுசரிப்பு
/
சர்வதேச இளைஞர் நாள் பண்ருட்டியில் அனுசரிப்பு
ADDED : ஆக 13, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச இளைஞர் நாள் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஆலமர் செல்வன் தலைமை தாங்கினார். என்.சி.சி., அலுவலர் ராஜா தொகுத்து வழங்கினார். தாசில்தார் ஆனந்த், உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், நல்லதம்பி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை கதிரவன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கி கூறினர். பின் மாணவர்கள் போதையை நாடக்கூடாது என்பதற்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

