/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஜூன் 11, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திட்டக்குடி வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பரத், கடந்த 7ம் தேதி கூலிப்படை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கறிஞர் பரத்தை தாக்கிய கூலிப்படையைச் சேர்ந்த மூவர் உட்பட 6 பேரை நேற்று முன்தினம் திட்டக்குடி போலீசார் கைது செய்தனர்.
வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திட்டக்குடி வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.